![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-eRVIQ_SCKRMvglBKAUq3FsxejCP6IBZ0P9P2S9SiAPIWaBIMlOy8BCqByZ_Mq_QKHtWbkDy5IWKOdRHJs4aUMrP1CMowFdDWaamDGlig6sxF0fxkYX5qMvopGb9HoRyQ4ObysOgY5-Ch/s320/vithi1.jpg)
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எழிலன் அண்ணா என்பவர் 50 க்கு மேற்பட்ட ராணி காமிக்ஸ்களையும் 25 ரத்னபாலா இதழ்களையும் ஒரு "லைப்ரரி"இலிருந்து ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்திருந்தார் . எனது அண்ணாவுக்கு எழிலன் அண்ணாவிடம் இரவல் வாங்கும் காமிக்ஸ் தான் அக்காலங்களில் இருந்த ஒரே பொழுதுபோக்கு. நானும் என்னுடைய பங்குக்கு ரத்னபாலா இதழ்களை புரட்டி பார்த்தேன். இங்குதான் எனக்கான காமிக்ஸ் பாலபாடம் ஆரம்பமானது. அப்போது
ரத்னபாலாவில் வந்த பிற கதைகளில் இருந்து விதி அண்ணல் தொடர் பெரிதும் மாறுபட்டதாக இருந்தது. எனக்கு பார்த்தவுடனே பிடித்து விட்டது. அக்காலத்தில் விண்வெளியில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் எல்லோரை போல எனக்கும் இருந்து. அதுவே விண்வெளி அண்ணல் கதை மேலே தீராத ஆர்வத்தினை ஏற்படுத்தியது.
எனக்கு 24 பாகங்களில் 18 பாகங்கள் மட்டுமே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தனை ரத்னபால இதழ்களை மட்டுமே "லைப்ரரி"இலிருந்து வாங்கியிருப்பார்கள் போலும். கடைசியில் எவ்வாறு கதை முடியும் என்று எல்லாம் நான் கனவு கண்டதெல்லாம் பழங்கதை. கடலுக்கு உள்ளே விதி அண்ணலும் சாவரக்கர்களும் சண்டை பிடிப்பதாகக்கூட கனவு கண்டேன். ஏனினும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக விதி அண்ணல் பற்றி எந்த தகவலும் இல்லாமலே கழிந்தது. விதி அண்ணலின் ஆங்கில பெயர் தெரியாமல் இன்டர்நெட்டில் ஏதோ பெயர்களில் தேடிப்பார்த்தும் சலித்ததுதான் மிச்சம்.
அப்போதுதான் விஷ்வாவின் TamilComicsUlagam கேள்வி பதில் பகுதி பதிவினை பார்த்தேன். மனதில் இருந்த ஒரு சில
தகவல்களை திரட்டி ஒரு "ஈமெயில்"இனை தட்டி விட்டேன். பெரிய ஆச்சரியமான பதில் சரியாக ஒரு மணித்தியாலத்தில் வந்திருந்தது. அத்துடன் பழைய ரத்னபால இதழ்களின் scan களையும் இணைத்திருந்தார். ஒரே நொடியில் 8 வயது சிறுவனின் ஆர்வத்துடன் ரத்னபால scan களை பார்த்து ரசித்தேன்.
நோக்ஸ் எனும் ஒரு வேற்று கிரகத்தின் ஆட்சியாளர்கள் பூமியின் வளர்ச்சியால்
கலவரமடைகின்றனர். பூமியை சேர்ந்த மனிதர்கள் தாங்கள் மிகவும் நேசிக்கும் பிரபஞ்சத்தினை அழித்து விடுவர் என அஞ்சுகின்றனர். அவர்கள் மனிதர்களை பூண்டோடு அழி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXfJBOf8E7HlI92KELBIN8lV_dpeAktRAhkjDJGk3U4_MbIv09z43zPJ4teMImt9wFAW58Rl9n5cYeaO_r5FzeR8ppKTkcgeVkk_KyfCPx6AqOBIssrWgJAmXfcSIMVpp-lAAbHB_bVkoN/s320/doomlrd3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvLElGwbjqapzFmz5YNUkQ9ijn6lx3dpNyVQd5XlUZe809kbLN-p9-qpu1-CzEWfx2YsCokWMNGumkvsPj4AYYbR1C9zNdOukTaUSgG7jNGDOSaDXCPDRzfh8FBwJf4r6TWPHbUiyLzdyo/s320/Doomlord_a.jpg)
அவனது ஆராய்ச்சியின் முடிவு மனித குலத்தின் மீதான அவனது அபிமானத்தினை அதிகரிக்கிறது. "வேக்" தனக்கிடப்பட்ட உத்தரவினை மீறி, ஏஜமானர்களை ஏதிர்க்க துணிகிறான். இதனால் நோக்ஸ் கிரக ஏஜமானர்கள் அவனுக்கு மரண தண்டனை வழங்கி, அதனை நிறைவேற்ற மூன்று சாவரக்கர்களுக்கு உத்தரவிடுகின்றனர். சாவரக்கர்கள் "வேக்" போன்றே எல்லா சக்திகளுடன் விளங்கினர். ஏனினும் அவர்கள் மரணதூதர்கள் ஆதலால் ஆக்ரோஷமான யுத்த முறைகளில் மேம்பட்ட நிலையிலிருந்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjavavMw2PWQKYL9SKu9YefOdJYLfqeRfjyLaGG2QvT28xmIdVOSrFoQsJv_oj1R-oU1gdPUXcEhL0Re-Iq2b7v1N4ubvuem0M21NW04R64lS7QnHwjunX5lqHARMn6two_gYMXbM17TZwQ/s320/Doomlord_b.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMacuZFEwulpksMES40FmD37VY-ZDQblN8iLjATxVEKYxgfvCPJVAhqTm4H0pN_AP9oR7_c-DnQcSpZOqbtecNzengpQD3VgRR4cIR62XT9NnTzP3SMhsLOrY8xwhuv6RBxmdKlkdu6QLV/s320/8.jpg)
"வேக்" நாயாக மாறி போராட்ட களத்தில் இருந்து வெளியேறுகிறான்.
"வேக்" மோதிரம் இல்லாமல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8dnG2vmRVk9dtydMcKh206cgUsxjChGzmD4aK06kZ4O_I2ZbzGkzyJnOCwDB5UyQN8xPem4zN2dLIgPhWJVMyQPn5X3ORPvB4dbAJFsimbfF5NwR_e0RTkrrWxz3-zgA7Wk0MDMRf6POZ/s320/7.jpg)
சாவக்கர்கள் மூவரும் மனிதர்களை அழித்தால்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhN83o2wCyHkk_kJRTR-n7fk-XsdtIC-NZy9S9wa2WGHz65hhyphenhyphenHa8bS__BnoIhwBNozh8JpVIq0NQky0SmBSilnkHNQqB-Aem8nCnBFNub5WajIc7Moj__VSIpRSZCStW4xJpXTtoUy2Mf/s320/4.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF9dpxNQ36Sv06yjJqnI0AsARh0tXsTvj_AI0oPF3IN3GUHPx6Vpct9T1fiBYQlRpb7D7v7v5xNj5GZQwH9hiTitTHgZL75JVfi4QJBzf_8yDmlEjDNznQ92VWtyzoEiOunCBrn6Bvyqfv/s320/5.jpg)
இதன்போது தனியே வெளிப்பட்ட சாவரக்கனை கொல்கிறான். மோதிரம் மூலம் சக்தியை பெற்ற "வேக்" ஒளித்து சந்தர்பத்திற்காக காத்திருக்கிறான். அமைதியை விரும்பாத சாவரக்கர்கள் விதி அண்ணலை கண்டு பிடித்து கடுமையாக சண்டையிடுகின்றனர். இதனால் மனிதர்கள் பலர் கொல்லப்படுகின்றனர். டெலிபோர்டிங் எனப்படும் இடம் விட்டு இடம் பாயும் யுக்தி மூலமாக அதிலும் தப்பி தலைமறைவாகின்றான் "வேக்". இதன்பின் சாவரக்கர்கள் மனிதர்களை பெருமளவில் கொன்று குவிக்கும் நடவடிக்கைகளில் கடுமையாக முன்னெடுத்தனர். மனித அழிவை தவிர்க்க எண்ணும் "வேக்" சாவரக்கர்களை நேரில் சந்திக்க எண்ணி stone-hench பகுதியில் அவர்களை ஏதிர் கொள்கிறான். அதில் அவர்களை கொன்று மனித இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான்.
இந்த கதைத்தொடர் eagle ஏனப்படும் காமிக்ஸ் தொடர் பத்திரிகையில் 83/84 காலப்பகுதியில் தொடராக வந்தது. இத்தொடரை Alan Grant & John Wagner ஆகியோர் உருவாக்கினர். Heinzl இத்தொடருக்கு அற்புதமான உயிரோட்டமான சித்திரங்களை வழங்கியிருந்தார். இதனை எங்களை போன்றே பழைய நினைவுகளை மீட்டும் முயற்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUfNI0H0Ve4yxbBSieTSPSrvX9v4eJU054RHh3I2pBGidpvCWAlcFoJyjY-PLE5UHAspgB0tOUjEqVSBhxClpzYRMmNgS5YP03FsR0XBeRUOnLSsk-f-OULg53x-3LtafhEy3RZTVvetIa/s320/250px-DoomLord%2528AD%2529.jpg)
மறுபதிப்பித்திருந்தார். இந்த 13th floor தான் மர்ம மண்டலம் என்ற பெயரில் திகில் காமிக்ஸில் வெளியிட்டிருந்தனர். இப்புத்தகங்களை இப்போதுகூட David Macdonald இடம் email மூலமாக கேட்டு பெற முடியும் என்று நம்புகிறேன் Email : Doomlord@eircom.net. Paypal மூலமாக 8 sterling pounds அவருக்கு அனுப்பி புத்தகத்தினை கோர முடியும். ஆனால் அவரது email பரிமாற்றம் சற்று நிதானமாகவே நடந்தது. ஏனவே பொறுமையாக காத்திருந்தால் புத்தகம் உங்கள் கையில் கிடைக்கும். புத்தகம் கறுப்பு வெள்ளை அச்சில் இருந்தாலும் அச்சு தரமாக இருந்தது.
பிண்ணிட்டீங்க!
ReplyDeleteமேல்ம் பல காமிக்ஸ் பதிவுகளை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
பை தி வே...
மீ த ஃபர்ஸ்ட்டு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Kindly remove word verification from your comment forum!
ReplyDeleteThanks in advance!
தலைவர்,
அ.கொ.தீ.க.
ஆங்கிலப் பதிப்புகள் பற்றிச் சொல்லி இப்பவே வாங்கியாகனும்கிற ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!
ReplyDeleteஇனி புத்தகம் கைக்கு வந்து சேர்ற வரைக்கும் என்ன செய்வேன்?!! அய்யகோ!!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
அடடே, அடடே,
ReplyDeleteஅசத்தலான தகவல்களுடன் ஒரு அற்புத பதிவு. சூப்பர்.
நல்ல ஒரு ஆரம்பம் நண்பரே. தொடருங்கள்.
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள், அவ்வப்ப்போது காமிக்ஸ் பற்றியும் சிறிது எழுதுங்கள்.
Mmm... you have remembered me our sweeeeeeet memories. Vimal! Have you remember your first comics release in those days? It is related to Space/Aliens...?!
ReplyDelete