Wednesday, May 30, 2012

இவன்தாண்டா Software என்ஜினியரு!

அவனுக்கு தலை கலைந்திருந்தது. மூஞ்சியை மூணு நாள் கழுவாத மாதிரி கண்கள் காய்ந்து போயிருந்தது. Armani டீ-சேர்ட் ஜீன்ஸ் போட்டு அரைவாசி இன் பண்ணியிருந்தான். டீ-சேர்ட் அவனுடைய கடைசி தம்பிக்குத்தான் சரியாக பொருந்தும் போல. அவனுக்கு கொஞ்சம் இறுக்கம்தான். ஜீன்ஸ் இரண்டு மூன்று இடங்களில் கிழிந்திருந்தது. பந்தடிக்கப்போற பயல் போடுற மாதிரி ஒரு அழுக்கு sports ஷு அவனது காலில் மாட்டப்பட்டிருந்தது. அவனுக்கு கிட்டே போனால் மூணு நாளைக்கு முன்னர் செத்த நாய்க்கு கிட்டே போன மாதிரி நாற்றம் வந்தது. இவ்வளவு விபரிப்புக்குமுரிய இந்த பிச்சைக்காரன் அல்லது பிச்சைக்காரன் மாதிரியான இவன் ஒரு A/C போட்ட அறையில் ஜாலியாக நின்றுகொண்டிருந்தான். என்னதான் இந்த பயல் பிச்சைக்காரன் என்று நீங்கள் நினைத்தாலும் இவனுக்கும் பிச்சைக்காரனுக்குமிடையே ஒரு முக்கிய வித்தியாசமிருக்கிறது. பிச்சைக்காரனிடம் லாப் டாப் இருக்காது அப்படியே இருந்தாலும், பிச்சைக்காரன் ஒரு நாளும் லேப் டாப்பில் சட்டு சட்டுனு டைப் பண்ண மாட்டான். Facebookக்கில் ஒரு statusஐ போட்டுட்டு அதுக்கு எவன் Like பண்ணுறான். எவள் ச்சோ கியுட் என்று பதில் comment அடிக்கிறாள் என்று பார்க்கமாட்டான். பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருந்தாலும், இந்த மாதிரி ஒருசில வித்தியாசங்களை கொண்ட ஜீவராசிதான் Software Engineer. இவன் ஒரு கூட்டத்திலே போனால் மற்ற எல்லோருமே இவனை ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பதுபோல பார்ப்பார்கள். இவனும் பதிலுக்கு அவர்களை புழுவை பார்ப்பதுபோல அலட்சியபார்வையுடன் நோக்குவான். அந்நேரத்திலும் அவனது காதுகள் Walkmanஇல் சத்தமாக கேட்கும் இங்க்லீஷ் பாட்டை கேட்டுக்கொண்டிருக்கும். தமிழ்ப்பாட்டு என்றால் ரஹ்மான் பாட்டு மட்டும்தான் கேட்பானுங்க.

இவனுக்கு இங்கிலீஷ் தெரியுமோ இல்லையோ! அவன் சொல்லும் கெட்ட வார்த்தை எல்லாமே இங்கிலீஷ் versionதான். S#!%, F^&$ என்று நாலு வார்த்தைக்கு ஒரு முறை சொல்லுவானுகள். எப்ப இந்த மாதிரி இலக்கியத்தனமான வார்த்தைகள் அவனது வாயில் இருந்து வராமல் இருக்கிறதோ அந்நேரம் அவன் தூங்கிக்கொண்டிருப்பான் இல்லை பெரிய Burger bunஐ விழுங்கிக்கொண்டிருப்பான். அவனது கண்களில் எப்போதுமே நான்கு மணித்தியாலத்தூக்கம் தொங்கிக்கொண்டிருக்கும். கண்கள் உள்ளே போய் கொஞ்சம் வயோதிகத்தனம் நிழலாடும். இப்படியான கேவலமான ஜந்துக்களான பல Software Engineerகளுக்கு GirlFriend என்றொரு சமாச்சாரம் இருக்கவே இருக்காது. ஏன் ஒரு பொண்ணு கூட Friendஆ இருக்க மாட்டா. பெண்களை பார்த்தாலே அநியாயத்துக்கு நெளிவான். ஆனா பயலுக்கு ஆம்பளை Friendகளின் எண்ணிக்கையை விட பொண்ணுங்கதான் Facebookகில friendஆ இருக்கும். சூப்பரா கமெண்ட் போட்டு எத்தனை பொண்ணுங்க Like பண்ணுது என்று கண்ணை விரித்து பார்ப்பான். ஆஞ்சு பொண்ணு Like பண்ணினாலே போதும் நம்மாளு Ticket வாங்காமலே உலகத்தினை சுற்ற ஆரம்பிச்சிடுவான். ஆனால் நண்பர்கள் மத்தியில் தான் ஒரு மன்மதன் என்பதான ஒரு மாயையை தோற்றுவிக்க முயற்சி பண்ணி தோற்றுவிடுவான்.

இப்பவெல்லாம் எந்த பொண்ணு freeஆ இருக்குது எது எவன்ட purseஐ காலி பண்ணுது என்று கண்டுபிடிக்க Facebook ஒரு நல்ல வரப்பிரசாதம். அதுக்கின்னே இருக்கிற சமாச்சாரம்தான்  Relationship status update. என்னுடைய lover இவன்தான், இவள்தான் என்று Profile ல் போட்டு காட்டி மற்றவர்களின் வயிற்றேரிச்சலை வாங்கிக்கொள்ளும் feature. 90% சதவீத Software Engineerக்கு ஒரு பொண்ணும் சிக்காது. இவன் போய் 24மணித்தியாலமும் வேலை வேலை என்று திரிவானாம். இவனை போய் யார்தான் லவ் பண்ணுறது என்று ஒருத்தியும் கண்டுக்க மாட்டா. அதை தாண்டியும் ஒருத்தனுக்கு செட் ஆனா என்ன சொல்றது. அவன்ட Purseக்கு கஷ்ட காலம்தான். ஆகவே பெரும்பாலான Software Engineerகள் மற்றவர்களின் Relationship statusஐ பார்த்து வயிறேரிவதிலேயே ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்தினை  செலவழிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு பயல் ஒரு பொண்ணு OK சொல்லிட்டா அம்மா அப்பாவிடம் சொல்றானோ இல்லையோ Facebookகில Relationship status update பண்ணிடுவான். ஆனா சிலவேளைகளில் இப்படி Publicஆ update பண்ண தடைகள் இருக்கலாம்.

1. அவனுடைய அப்பாவோ அம்மாவோ Facebookஇல Friendஆ இருந்தால் கிழிஞ்சுது. "டேய் என்னடா இதெல்லாம்" என்று தொடங்கும் பூசை, தலைகீழாக அபிஷேகத்தில் முடியும்.

2. அவனுடைய பழைய காதலி யாராவது Friendஆ இருந்தா போதும். புது காதலிக்கு பழைய காதலி Friend request அனுப்பி இவன் இப்படித்தான் என்னையும் கழற்றி விட்டான் என்று எச்சரிக்கை Chat அடிப்பாள்



3. பொறாமை பிடித்த நண்பர்கள். ஏதாவது பழைய விசயங்களை Facebookஇல் comment என்ற வடிவில் கிளப்பி விடுவார்கள். "டேய் ராஜூ! நீயும் சராசரியான ஆம்பிளைதான்" என்று வசனத்துடன் காதல் முற்று பெறும் சாத்தியங்கள் மிக அதிகம்.


Software Engineerகள் வீட்டில் இருப்பதைக்காட்டிலும் Officeஇல் அதிக நேரத்தினை செலவழிப்பான். "மகன் ஒரே பிஸிதான்.. இப்ப ஏதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி Project செய்றான்" என்று பக்கத்து வீட்டு அங்கிளுக்கு அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். "நேற்றுக்கூட இரவு இரண்டு மணிக்கு வரச்சொல்லி ஆபீசிலிருந்து போன்.. அது அவனால மட்டும்தான் செய்ய முடியுமாம்" என்று பெருமைபடுவார் அப்பா.. ஆனா இதை நம்மாளு கேட்டா நொந்து போடுவான். அவன் வேலைகளில் செய்த பூச்சி பிழைகளை (Bugs) உடனடியாக திருத்தித்தருமாறு Project manager சத்தம் போட தூங்குமூஞ்சியாக
அதிகாலை இரண்டு மணிக்கு போக வேண்டியதாகி விட்டது. அவன் செய்த பிழைகளை அவன்தானே திருத்த வேண்டும். ஆகவே அவனால மட்டும்தானே முடியும். "வீட்டை ஒருநாள் இருக்க மாட்டான். Officeக்கு போய் என்னத்தைதான் கிழிக்கிறானோ தெரியல.. இந்த பாழாப்போன வேலைக்கு போனதிலிருந்து அவன் பாதியா போயிட்டான்" என்று அம்மா அவனுடைய healthஐ பற்றி புலம்புவாள். லீவு நாளில் வீட்டை சும்மா இருந்தா எதாவது வீட்டு வேலையை தந்தாலும் என்ற பயத்திலேயே அவன் Officeஇற்கு போகிறான் என்ற விஷயம் தெரியாமல் அப்பா மகனை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார். எந்நேரமும் AC போட்டு மூடி இருக்கும் Officeஇல் இருப்பதால் சூரியன் உதித்து மறையும் சமாச்சாரம் இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. சூரியன் எந்த திசையில் உதிக்கும் என்று கேட்டால் 2ஆம் வகுப்பு பிள்ளை கூட சரியாக சொல்லும் ஆனா நாம்மாளு கடுமையா யோசிப்பான். "West இல்லை Northஆ இருக்குமோ! கொஞ்சம் doubtஆ இருக்கு" என்று முறுக்கு புழிவான். வேலையில் அவனுக்கு இருக்கும் அனுபவம் கூட கூட பொது அறிவு Graph கீழ் நோக்கி சரியும்.


எனக்கு பல Software Engineerஆன நண்பர்களை தெரியும். அவர்களுடன் கதைக்கும் போது எப்போதும் சிரிப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்னதான் ஜோக் சுமாராக இருந்தாலும். இல்லையென்றால் கூட்டத்தில சேர்க்கமாட்டானுக. தங்களுக்கு மட்டுமே விளங்கிற ஒரு Logicஇல் கதையை காதில ரத்தம் வாற அளவுக்கு இட்டுக்கட்டி சொல்லுவானுங்க. .ஆகவே உங்களுக்கு பொழுதுபோக்க ஒரு விஷயமும் இல்லை என்றால் Software Engineerஐ வம்புக்கு இழுக்கலாம். நல்லா பொழுது போகும். அதையே Facebookஇல் வம்பு இழுத்தா நல்லா Respond பண்ணுவான். சும்மா செஞ்சு
பாருங்க!

மேலே எனக்கு தெரிஞ்ச உண்மைகளைத்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு சிரிப்பு வந்தா சும்மா சிரிச்சுட்டு போங்க.. ஆனா இனி நீங்க ஒரு Software Engineerஐ தெருவில் பார்த்தால் சிரித்துவைக்காதீர்கள். நொந்துபோயிடுவான். அவனும் ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் "Like This" ஐ கிளிக்குங்கோ! இல்லேன்னா பரவாயில்லை Friends ஆகவே இருப்போம் :).

15 comments:

  1. ஹா ஹா ஹா அட்டகாசம்.

    ReplyDelete
  2. தாங்க்ஸ் விஷ்வா :)..

    ReplyDelete
  3. கலக்கல்ஸ்! :-)

    ReplyDelete
  4. Thanks Jee.. I heard that Latest Lion Comics En Peyar Largo available in Wellawatte Police station Bus Halt News paper shop

    ReplyDelete
  5. Super Vimal... Very pacy narration.. Lot of unnecessary words are cut off.. I can realize it! Huge different frm ur previous narratives..

    And bit of Sujatha here and there... Understandably ;)

    ReplyDelete
  6. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஜேகே..
    சுஜாதாவே சொல்லியிருக்கார்.. தெரிஞ்ச களத்தை எடுத்து எழுதுங்கோ! என்று.. தெரியாத விஷயங்களை சரியா வரலைதான்.. இது நம்ம ஏரியாதானே :)

    ReplyDelete
  7. SUPERB! NALLAVARA ?... KETAVARA?.. SORRY! .. ITHU KATHAIYA?... NIYAMAAA? ............

    http://kogulamrc.blogspot.com/

    ReplyDelete
  8. http://kogulamrc.blogspot.com/2012/03/blog-post.html

    Comics Books Kovil Kadaiyilum kidaikkum.

    ReplyDelete
  9. பப்ளிக்கில இவ்ளோ காட்டு காட்டி இருக்க வேண்டாமோ ?

    ReplyDelete
  10. //எப்ப இந்த மாதிரி இலக்கியத்தனமான வார்த்தைகள் அவனது வாயில் இருந்து வராமல் இருக்கிறதோ அந்நேரம் அவன் தூங்கிக்கொண்டிருப்பான்//

    ஹி ஹி ஹி .....நல்ல அறிமுகம் தான்

    ReplyDelete
  11. // "நேற்றுக்கூட இரவு இரண்டு மணிக்கு வரச்சொல்லி ஆபீசிலிருந்து போன்.. அது அவனால மட்டும்தான் செய்ய முடியுமாம்" என்று பெருமைபடுவார் அப்பா.. ஆனா இதை நம்மாளு கேட்டா நொந்து போடுவான். அவன் வேலைகளில் செய்த பூச்சி பிழைகளை (Bugs) அவன்தானே திருத்த வேண்டும்.//

    முடியல.. :D

    ReplyDelete
  12. """"எனக்கு பல Software Engineerஆன நண்பர்களை தெரியும். அவர்களுடன் கதைக்கும் போது எப்போதும் சிரிப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்னதான் ஜோக் சுமாராக இருந்தாலும். இல்லையென்றால் கூட்டத்தில சேர்க்கமாட்டானுக. தங்களுக்கு மட்டுமே விளங்கிற ஒரு Logicஇல் கதையை காதில ரத்தம் வாற அளவுக்கு இட்டுக்கட்டி சொல்லுவானுங்க."""""


    இது software engineer இல் மட்டும் இல்ல....
    எல்லா கூடத்திலும் இந்த மாதிரி ஆளுங்க இருக்கிரங்கள்!!!!!!

    ReplyDelete
  13. Kathaiyalla Nijam, Good self reflection!!!

    ReplyDelete
    Replies
    1. Thanks Muhunthan anna.. நீங்க Network Engineers பற்றி எழுதுங்கோ :)

      Delete
    2. Can write, but the people in Software field will be Jealous about Network Engineers.

      Delete