Sunday, November 11, 2012

Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்

இப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்

Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்சயந்தனிடம் சுட்ட படம்
Yarl Geek Challengeஇன் இரண்டாம் நாள் முடிந்திருந்தது. இதுவரை நடைபெற்ற இரண்டு Roundகளும் நிறைய சந்தோசங்களையும் சிலருக்கும் ஏமாற்றத்தினை கொடுத்திருந்தாலும் இரண்டாம் நாள் முடிவில், போட்டியாளர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த நாளுக்குரிய ஆயத்தங்களை செய்வதிலேயே குறியாக இருந்தனர். அடுத்த நாள் Algorithm Round என்ற செய்தி எல்லோருக்கும் ஒருவித மிரட்சியை கொடுத்தது. எல்லா அணியினரும் தங்களது Mentorகளை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு அடுத்த Roundக்கு தேர்வு செய்ய வேண்டிய Algorithm பற்றி ஆராய்ந்தனர். Algorithm Round என்பது Mentorகளுக்கும் மூளைக்கு வேலை கொடுத்தது. நாள் முழுக்க வேலை செய்த சோர்வுடன் வீட்டுக்கு போனோம். அடுத்த நாள் போட்டியின் போது யாராவது ஒரு Mentorஐ முன்னுக்கு பலியாடாக அனுப்பி ஏதாவது Algorithm எழுத வைக்கலாமா என்று ஜாலியாக விவாதித்தோம். அநேகர் அன்றைய நாள் முழுக்க கேள்விகளால் துளைத்துகொண்டிருந்த விஜயராதாவின் பெயரை முன்மொழிந்தார்கள். "ராதா! எதற்கும் நாளைக்கு Algorithm எழுத தயாரா வாங்க" என்று சொல்லிவைத்தேன். அதற்கு ராதா, "துஸிதான் பலியாடாக போக சரியான ஆள். பாருங்க! ஆடு மாதிரியே தாடியும் வச்சிருக்காரு" என்று கூறி மறுத்தார்.

அன்று இரவு நாங்கள் தங்கியிருந்த வீட்டில் நடந்த சம்பாஷணையில் அன்றைய தினத்தில் நடந்த சம்பவங்கள், எதிர்பார்த்து நடைபெற்ற விஷயங்கள், நடைபெறாத விஷயங்கள் பற்றி அலசப்பட்டது. அடுத்த நாள் எப்படி இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே நித்திரைக்கு போனேன். போட்டியாளர்கள் இதுவரை நான் அறிந்திராத languageஇல் Algorithm எழுதுவது போன்று பயங்கர கனவு வந்தது.

அடுத்த நாள் எட்டு மணிக்கு அரியாலையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்டு Mentorகளை பழைய parkஇலிருந்து ஏற்றிக்கொண்டு கொக்குவில் இந்து கல்லூரிக்கு பயணப்பட்டோம்.  போகும் வழியில் கதைத்தபோதுதான் விஜயராதா இரவு இரண்டு மணிவரை தூங்காது பலியாடு Segmentக்காக சிரத்தையுடன் ஆயத்தப்படுத்தியதாக தெரியவந்து எல்லோரும் சிரித்தோம். அன்று கொஞ்சம் கூடுதலாகவே தாமதம். ஒன்பது மணியளவில் போட்டி நடக்கும் இடத்துக்கு போய் சேர்ந்தோம். அதுவரை போட்டியாளர்கள் Mentorகளின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். போட்டியாளர்கள் இந்த roundஇல் தங்களது projectஇல் உள்ள ஒரு முக்கியமான Business logicஇற்கு Algorithm எழுதி present செய்யவேண்டும். ஆகவே போட்டியாளர்கள் இரண்டு மணித்தியாலத்துக்குள் algorithm எழுதியாக வேண்டும் என்பதால் துரித கதியில் செயற்பட்டு தயாராகி கொண்டிருந்தனர்.

அன்றைய Round பற்றிய அறிமுகத்தை விஜயராதா judgesகளுக்கு விளக்கினார். ஒரு மணிக்கு அண்மையாக அணிகள் தங்களது presentationஐ ஆரம்பித்தன. ஏற்கனவே இரண்டு அணிகள் முந்தைய நாளில் வெளியேற்றப்பட்டிருந்ததால் ஆறு அணிகளுக்கு எட்டு நிமிடங்கள் வீதம் present செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. ஏழு நிமிடங்கள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் presentation செய்வதை காட்டிலும் கேள்வி-பதிலுக்கு நிறையவே பயந்தார்கள். ஒவ்வொரு முறை கேள்வி-பதில் முடிந்த பின்னரும் சொர்க்கத்துக்கு போக டிக்கெட் கிடைத்தது போல ஆழ்ந்த நிம்மதியுடன் தங்களது இடத்துக்கு திரும்புவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Round-03: Algorithm Round

Team: phoenix

இந்த Roundஇல் போட்டியாளர்களின் Algorithmகள் correctness, performance, clearness போன்ற அளவுகோல்கள் மூலமாக சோதிக்கப்பட்டன. அனேக அணியினரின் algorithmகள் correctnessஇல் தேறினாலும் சரியாக present பண்ணுவதில் தடுமாறினார்கள். ஆனாலும் சில அணிகள் தெளிவாக present செய்து புள்ளிகளை அள்ளின. Arimaa அணியினர் காட்டிய algorithm மொத்தமே 10 வரிகளே இருந்தாலும், தெளிவான விளக்கம் மூலமாக கவர்ந்தார்கள். Algorithmஇன் performanceஇனை பற்றி குறிப்பிட big (o) notation பற்றி குறிப்பிட்ட ஒரே அணி இவர்களுடையதுதான். கேள்வி நேரத்தின்போது, இதிலும் judges ஏதாவது பிழை கண்டுபிடிக்க முயல, கடுமையான விவாதம் மூலம் defend செய்தார்கள். எனினும் இறுதியாக சில பிழைகளை ஒத்துக்கொண்டார்கள். சிலவற்றுக்கு சரியாக விளக்கமளித்தனர். இவர்களது கேள்வி-பதில் நேரம் முடிந்த பின்னர் மேடை, போர் ஓய்ந்த போர்க்களம் போல காட்சியளித்தது.

Smart friends அணியினர் mathematical calculation சம்பந்தமான தெளிவான Algorithmஇனை கையிலேடுத்திருந்தாலும் அவர்கள் present பண்ணிய sequence கொஞ்சம் குழப்பத்தினை கொடுத்தது. Presentation உருப்படியாக இருந்தாலும், கேள்வி நேரத்தில் வந்த சரமாரியான கேள்விக்கணைகளை இவர்கள் சரியாக defend பண்ணவில்லை போலிருந்தது. Crazy coders ஒரு எளிதான Algorithm மூலமாக தெளிவாக present செய்தனர். எனினும் இவர்கள் தெரிவு செய்த algorithm இந்த roundக்கு பொருத்தமானதா? என்ற கேள்வியை judges எழுப்பினர் . இதனால் கேள்வி நேரத்தின்போது முழுக்கேள்விகளும் அதனை சார்ந்தே இருந்தது இவர்களுக்கு பாதகமாக இருந்தது.

Team Arimaa with expert panel
Phoenix அணியினர் present செய்த algorithm அவ்வளவாக தெளிவாக இருக்கவில்லை போலப்பட்டது. இவர்களது algorithm சில implementation detailகளுடன் உடன் கலக்கப்பட்டிருந்தது சில விசயங்களில் தெளிவற்ற தன்மை இருந்தது. Zeros அணியினர் ஆடுபுலி ஆட்டத்தில் computer எவ்வாறு ஆட்டத்தின்போது அடுத்த moveஐ செய்யும் என்பதை விளக்கினார்கள். முழு presentationஆக பார்க்கும்போது ஒருவித தெளிவு இருந்தாலும், சில இடங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றே எனக்கு தோன்றியது. இவர்கள் ஒரு சிறிய பகுதியை எடுத்து இன்னும் தெளிவாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் என்னைகேட்டால் இவ்வாறான போட்டிகளுக்கு நிறைய algorithmஇனை காட்டி குழப்பினால் specificக்கான கேள்விகளிலிருந்து தப்பிவிடலாம் என்பேன் :).

Cybers ஒரு எளிமையான algorithmஇனை தெளிவாக present செய்தனர். ஆனாலும் எழுதப்பட்ட algorithmஇல் இருந்த சின்ன சின்ன விசயங்களை கவனித்திருந்ததால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் கேள்வி நேரத்தின்போதும் தெளிவாக பதிலளித்ததால் தப்பித்துகொண்டார்கள்.

எல்லா அணிகளும் தங்களது presentationஇனை முடித்திருந்தன. judges மேடையிலிருந்து வெளியேறி தனியான இடத்தில் அணல் பறக்க விவாதித்தனர். சர்வேஸ் அண்ணா "விவாதம் கடுமையாக இருக்கிறதே. இன்று இரண்டு elimination இருக்கும் போல இருக்கே" என்றார். judgesஇன் விவாதம் முடிய நாற்பது நிமிடங்களுக்கு மேலானது. அதைமுடித்து judges
மந்திராலோசனை
திரும்பும்போது எல்லா போட்டியாளர்களும் இஷ்ட தெய்வத்தினை வேண்டிக்கொண்டனர். வந்ததும் வராததுமாக இன்று மூன்று அணிகளை வெளியேற்ற இருப்பதாக சொல்லி கிலியை ஏற்படுத்தினார்கள். முதலில் ஏதோ TVஇல் வரும் reality showக்களில் வருவது போல ஜோக்கடிக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சிரித்துக்கொண்டே உண்மைதான் பேசினார்கள் என்று பின்னர்தான் தெரிந்தது.

அன்றைய போட்டிகளில் Phoenix, Crazy coders, Smart friends ஆகிய அணியினர் வெளியேற்றப்பட்டதாக அறிவித்தனர். Cybers, Arimaa, Zeros ஆகிய அணிகள் கடைசி சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட அணிகளை சேர்ந்த போட்டியாளர்கள் இதனை எளிதான விடயமாக எடுத்ததை பொதுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தொடரும்.. (Final: Strategy round)

3 comments:

 1. Nice to see this initiative in Jaffna and the involvement of the students and the mentors.

  Regards,
  Kathiravelu Pradeeban.

  ReplyDelete
 2. " judges மேடையிலிருந்து வெளியேறி தனியான இடத்தில் அனல் பறக்க விவாதித்தனர்." என்று மிக எளிமையாக முடித்தவிட்டீர்கள். விவாதம் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். ஒவ்வொரு புள்ளிக்கும் நாய் படாப் பாடு படவேண்டியிருந்தது. (எங்காவது ஒரு எலும்புத்துண்டிற்காக இரண்டு நாய்கள் சண்டைபோடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?)
  தெளிவிற்கு இந்தக்குழுவிற்கு 10 புள்ளிகள் கொடுத்திருப்பார் ஒருவர். இன்னொருவர் 12 கொடுத்திருப்பார். எவ்வளவு கொடுக்கலாம் என்று அனல் பறக்க விவாதித்து ஒருபடியாய் 11 என்று முடிவெடுப்போம். பிறகு மற்றக்குழுவிற்கு இது மாதிரி விவாதித்து 12 என்று முடிவெடுத்தால் “அதெப்படி அந்தக் குழுவிற்கு 11 கொடுத்துவிட்டு இங்கே 12 கொடுக்கலாம். அவர்களை விட இவர்கள் நன்றாகச் செய்யவில்லையே” என்று இன்னொரு விவாதம் தொடங்கும்.
  கடைசியில் ஒருபடியாய் முடிவெடுத்து மேடைக்குத் திரும்பி அங்கேயும் மறுபடி விவாதம் தொடங்கியது தான் ஹைலைற்.

  ReplyDelete
  Replies
  1. நான் அங்கே இல்லாதபடியால் எனக்கு அங்கே என்ன நடந்தது என்று தெரியாது. நீங்கதான் இருந்தீங்களே! அதைப்பற்றி ஒரு பதிவு எழுதி அங்கே என்னதான் நடந்தது என்று வெளிச்சம் போட்டு காட்டுங்கோ!

   Delete