Sunday, June 5, 2011

சிரிப்பு இலக்கியவாதி கோஸ்ஸின்னி




சிறுவயதுகளில் அஸ்டேரிக்ஸ் ஒபெலிக்ஸ் கதைகளை வாசிக்காதவர்கள், எம்மில் மிகக்குறைவாகவே இருப்பார்கள். 1950களின் இறுதியிலே ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் எண்ணிலடங்காத பல வாசகர்களை உலகெங்கிலும் சம்பாதித்துள்ளது. இத்தொடரில் வந்த கதைகளே நற்பதுக்குள் இருந்தாலும், பல தடவைகள் மறுபதிப்பிக்கபட்டு, தாத்தாகள் முதல் பேரன்கள்வரை தலைமுறைகள் தாண்டி வாசித்த மகிழ்ந்த ஒரு ஒரே காமிக்ஸ் புத்தக தொடராக திகழ்கிறது. ரேனே கோஸ்ஸின்னி கதை எழுத, ஆல்பர்ட் uderzo (தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியல சாமி!) என்பவர் படம் வரைய தடபுடலாக 1959ல் ஆரம்பமானது. இவர்களின் அருமையான partnershipஇல் 24 புத்தகங்கள்வரை வெளிவந்து முப்பத்தைந்து மில்லியன் பிரதிகள்வரை விற்று சாதனை படைத்துள்ளது.

இதில் ரேனே கோஸ்ஸின்னி சிறுவர் இலக்கியங்களுக்கு அளித்த பங்களிப்பு அதிஅற்புதமானது. இவர் 1926ம் ஆண்டு பாரிஸ் நகரிலே பிறந்தார். பாடசாலை காலங்களிலே, மிகவும் கூச்ச சுபாவமுள்ள கோஸ்ஸின்னி அதனை மறைக்கும்விதமாக ஜோக் சொல்லி ஏனைய மாணவர்களை சிரிக்க வைத்து கொண்டே இருப்பாராம் (பிறகு உலகையே சிரிக்க வைத்தார் இந்த மனிதர் :)). அப்போதே படம் மூலம் கதை சொல்லும் புத்தகங்களால் கவரப்பட்டு தன் ஓவிய திறமையை வளர்த்து கொண்டார். இளவயதிலேயே தந்தையை பறிகொடுத்ததால் 17ம் வயதிலே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு

உள்ளானார். பலவிதமான வேலைகளை செய்தாலும், அவற்றில் ஓவியம் வரையும் தொழில் எவ்வாறோ கிடைத்துவிடும். குறிப்பாக advertisement company ஒன்றில் ஓவியராகவும், பின்பு France இராணுவத்தில் இணைந்து கொஞ்ச காலம் பணியாற்றி கடைசியாக இராணுவ Regimentஇன் உத்தியோகபூர்வ ஓவியராகவும் மாறினார். 1940களின் இறுதியிலே பல வேலைகளாக மாறி எதிலும் வெற்றி கிடைக்காமல் மனமுடைந்த நிலையிலிருந்தார். இக்காலங்களில் New Yorkஇல் சில பத்திரிகைகளில் ஓவியராக பணியாற்றினார். ஆனால் பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பின்பு 1951ல் World Press Agencyஇல் தலைவராக பொறுப்பேற்க மீண்டும் Paris வந்தார். அங்குதான் அவருடைய நீண்டநாள் நண்பரான Uderzoஇனை முதன்முறையாக சந்தித்தார். இதுவரை காலமும் Cartoonist ஆக வேலை பார்த்த கதாசிரியராக கோஸ்ஸின்னி தன்னை மாற்றிக்கொண்டார். 1959ல் ஆரம்பிக்கப்பட்ட Pilote என்ற காமிக்ஸ் பத்திரிகையில், அஸ்டேரிக்ஸ் என்ற எங்களுக்கு மிகவும் பரிச்சயமான தொடர் ஆரம்பிக்கப்பட்டது. Pilote என்பது ஒரு வாரப்பத்திரிகை, எனவே கதாசிரியர்களும் ஓவியர்களும் தலையை பிய்த்து கொண்டு அடுத்த வாரத்திற்குரிய கதைகளை வேகமாக உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். இவ்வாறே கோஸ்ஸின்னி கதை, வசனம் எழுத Uderzo படம் வரைய தொடர் பெறும் வரவேற்புப்பெற்றது. இது தவிர வேறு பல தொடர்களுக்கும் கோஸ்ஸின்னி கதாசிரியராக பணியாற்றினார். 1960ல் Dargaud என்ற காமிக்ஸ் நிறுவனம் Pilote பத்திரிகையை வாங்க, அந்த பத்திரிகையின் தலைமை Editor ஆக பதவியேற்றார்.

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களாகிய எங்களுக்கு லக்கி லூக் மற்றும் மதியில்லா மந்திரி "நா மோடி மஸ்தான்" மூலம்தான் கோஸ்ஸின்னி மிகவும் பரிச்சயமானார். எங்கள் அபிமான லயன் காமிக்ஸ் மூலம் பல இதழ்களில் அவரது இனிய வரலாற்று பின்னணியுடன் கூடிய நகைச்சுவையை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தெரிந்து, ஜெஸ்ஸி ஜேம்ஸ் இதழின் 3/4ம் பக்கத்தில் விஜயன் அவர்கள் "கதை : கோஸ்ஸின்னி, ஓவியம் : மோறீஸ்" என்று குறிப்பிட்டு இருப்பார். நகைச்சுவை கதைகளை மொழிபெயர்ப்பது, கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு சிரமமான காரியம்தான். எல்லா வசனங்களும் சிரிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு வசனத்தையும் கவனமாக வாசகர் மனநிலையிலிருந்து பார்த்து மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் உண்டு. இதனை லயன் மொழிபெயர்பாளர்கள் அற்புதமாக செய்திருப்பார்கள். லக்கி லூக் கதைகளின் வெற்றிக்கான காரணங்களாக எனக்கு முதலில் பின்வரும் காரணங்களே மனதில் தோன்றுகிறது.

1) ஒவ்வொரு கதைகளிலும் சுவையான ஒரு western வரலாற்று சம்பவம் இடம்பெற்றிருக்கும்

2) கதையில் வரும் பல பாத்திரங்கள், பல உண்மையான 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த cowboy பாத்திரங்களை ஒத்திருக்கும். ஆனால் அவற்றை அழகாக நகைச்சுவை பாத்திரங்களாக மாற்றியிருப்பார்.
உதாரணமாக, ஜெஸ்ஸி ஜேம்ஸ், டால்டன் சகோதரர்கள், மா டால்டன் (நால்வர் அணியின் அம்மா), அடிதடி ஜேன்

3) வசனம் மட்டுமல்லாது படங்களும் அருமையாக கதை சொல்ல அனுமதித்திருப்பார்கள். இதில்தான் அஸ்டேரிக்ஸ் கதைகளில் இருந்து லக்கி லூக் கதைகள் வேறுபடும். மோறீஸ், அஸ்டேரிக்ஸ் கதைகளில் வரும் வார்த்தைகளை மாற்றி விளையாடும் சொல்விளையாட்டு நகைச்சுவைகள் லக்கி லூக் கதைகளுக்கு பொறுத்தமில்லை என்று கூறினாரோ என்னவோ, கோஸ்ஸின்னி நேரடியான உண்மை சம்பவங்களை கலாய்க்கும் காமெடிகளை அள்ளி தெளித்திருப்பார். மதியில்லா மந்திரி கதைகளுக்கு, ஒரு வார்த்தையில் வெவ்வேறு அர்த்தங்களை கூறும் Pun வகையான நகைச்சுவைகளை
பாவித்திருப்பார்.

4) அநேக பாத்திரங்கள் (வில்லன் பாத்திரங்கள் உட்பட) எந்தவிதமான கெட்ட உள்நோக்கங்களும் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவது, வாசகர்களாகிய எங்களையே சிறுவர் உலகத்திற்கு கொண்டு சென்று கதை சொல்வது போன்ற இன்பத்தினை அளிக்கும்

கோஸ்ஸின்னி லக்கி லூக் கதைகளுக்கு கதை எழுதிய காலத்தினை, அந்த seriesஇன் பொற்காலம் என குறிப்பிடுகிறார்கள். விஜயன் அவர்கள் லக்கி லூக் கதைகளை பதிப்புக்கு தேர்ந்தெடுக்கும்போது, கதாசிரியராக கோஸ்ஸின்னி இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன் :)



கோஸ்ஸின்னி மற்றும் Uderzoவிடம் பலர், இந்த அஸ்டேரிக்ஸ் கதைக்கான ideaவினை எவ்வாறு உருவாக்குகிறீர்கள் என்று கேட்க, இதனை ஒரு பக்க காமிக்சாக இருவரும் கிண்டலாக பதிலளித்திருப்பார்கள்.


1) கடுமையான பல தேறாத ideaகளுக்கு மத்தியில் கடைசியாக உருப்படியான ideaஇனை பெற்று கொள்கிறார்கள்
























2) எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையிலான பாஷையே தனிதான். கதை உருப்பெறும் அழகை(?) பாருங்கள்

























3) இவர்களது நடவடிக்கை, பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரரை மனநல மருத்துவமனைக்கு phone பண்ண தூண்டுகிறது.
























இப்படி காமிக்ஸ் தொடர்களால் எங்களை கவர்ந்த கோஸ்ஸின்னியை காலன் 1977ம் ஆண்டு கவர்ந்து சென்றான். தனது 51ம் வயதிலேயே இந்த மேதை இந்த உலகை விட்டு நீங்கினார். இவர் இன்னும் 20

வருடங்களாவது கூடுதலாக வாழ்ந்திருந்தால் இன்னும் பல நகைச்சுவையான காமிக்ஸ்கள் உருவாக்கி இருப்பார். இந்த கவலை ஒவ்வொரு முறை அஸ்டேரிக்ஸ் புத்தகத்தினை வாசிக்கும்போதும் ஏற்படும். இவருடைய இறப்புக்கு பின்னரும் Uderzo தானே கதை எழுதி அஸ்டேரிக்ஸ் புத்தகங்களை உருவாக்கி வருகிறார். ஆனாலும் இவை கோஸ்ஸின்னியின் கதை வசன தரத்திற்கு அண்மையில் இல்லாமல் இருப்பது உண்மைதான். 2008ம் ஆண்டு Unesco மூலம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுக்கின்படி, கூடுதலாக வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் வரிசையில்
கோஸ்ஸின்னி 22ம் இடத்தில் இருப்பது காமிக்ஸ் ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமைதான்.

7 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. ரசித்து படித்தேன். படிக்கையிலேயே இந்த கதைகளின்மேல் இருந்த உங்களின் தீராத அன்பு தெளிவாக புலனாகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நண்பரே,

    இந்த ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளை 'மீண்டும்' தமிழில் படிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

    ReplyDelete
  3. ஹாய் விஷ்வா,
    உங்கள் அன்பான ஊக்கத்திற்கு நன்றி. ஆஸ்ட்ரிக்ஸ் கதைகள் தமிழில் படிக்கும் நாளை எதிபார்த்து காத்திருப்பேன்.

    ReplyDelete
  4. Very good post friend . Dogmatix is my favorite character in Astreix and obelix series .

    It would be wonderful if someone can come up with post covering all the pets in the comic series .
    eg snowy in Tintin
    Dogmatix in Astreix
    dog in Sparky
    Squirrel in Spirou and Fantasio

    ReplyDelete
  5. விமல்! நல்வொரு பதிவு. இப்பதிவைப் படித்த பின் ரேனே கோஸ்ஸின்னியின் இழப்பு மிகவும் கவலையைத் தருகிறது. விஸ்வா! ஆஸ்ட்ரிக்ஸ் தமிழிலா? மிகவும் ஆர்வமாகவுள்ளதே... நண்பர் எப்போது வெளியிடவுள்ளார்? அவருக்கு எங்களது வாழ்த்துக்களை கூறிவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
  6. புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  7. ஹாய் Mohamed Faaique,
    உங்கள் வரவுக்கு நன்றி..

    ReplyDelete