Saturday, December 31, 2011

Why this கொலைவெறி -- அடுத்த கட்டம்தான் என்ன?

தனுஷின் கொலவெறி பாடல் சும்மா பட்டிதொட்டி மட்டுமல்லாது, Youtube, Facebook, Twitter என்று சும்மா வெளுத்து வாங்குகிறது. இந்த பாடல் வந்த 2ம் நாளில் அந்த பாடல் பதிவு வீடியோவை எதேச்சையாக TVஇல் ஒரு நிமிடம் பார்க்க நேரிட்டது. ஏதோ கடனுக்கு பார்ப்பது போல் பார்த்துவிட்டு தலையில் தண்ணீர் எடுத்து தெளித்துவிட்டு மறந்தே போனேன். Facebookஇல் நண்பர்கள் குழாம் அதை share பண்ணி அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியம் சேர்த்து கொண்டார்கள். "இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்" என்று சொல்லிவிட்டு அந்த YouTube வீடியோவையும் நான் கண்டுகொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது ஒருநாள் என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பன் இந்த கொலவெறி பாட்டை பற்றி சிலாகித்து கூறினான். இதுபோதாதென்று "திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்" ரேஞ்சுக்கு என்னிடம் விளக்கத்தினை எதிர்பார்த்தான். எனக்கு தெரிந்த இங்கிலிஷில் கொலவெறியை விபரிக்கமுயன்று தோற்றேன். இதுவரை காலமும் தமிழனாக கர்வத்துடன் சுற்றி திரிந்த நான் தலைகுனிந்தேன். மனசாட்சி நேரில் வந்து "நீயெல்லாம் தமிழனா" என்று தெரிந்த கெட்ட வார்த்தையால் வசைபாடியது. இந்த வேளையில்தான் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்தேன். ஏற்பட்ட அவமானத்தினை துடைக்க கடலில் குதிக்காமல் காதை தீட்டி வைத்துகொண்டு "கொலவெறி" பாடலை பற்றிய செய்திகளில் ஆர்வம் காட்டினேன். அப்போது காதில் விழுந்த செய்திகளும் காதில் இரத்தம் வரவைக்கும் அளவுக்கு காரமாக இருந்தது.

ஒருசில சாம்பிள்கள் பின்வருமாறு :

1. அமிதாப் பச்சனே கொலவெறி பாடலில் மயங்கி தனுஷை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு பாராட்டினார்
2. ஹிந்தி சினிமாவின் முன்னணி கவிஞர் ஜாவேத் அக்தர் கொலவெறி பாடலில் உள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்
3. பாட்டில் மயங்கிய இந்திய பிரதமரே தனுஷை இரவு உணவுக்கு அழைத்தாராம்
4. வேற்று மொழி மக்களும் கொலவெறி பாடலை தங்களது மொழிக்கு ரீமிக்ஸ் பண்ணி மகிழ்கிறார்களாம். சிங்கள versionஐ கேட்டேன். நல்லாத்தான் மாற்றியிருக்கிறார்கள்.
5. Oscar விருது வாங்கிய இசைபுயல் A.R.ரஹ்மானே தனது albumஇல் தனுஷை பாடுமாறு கேட்டு தனுஷின் நேரத்துக்காக காத்திருகிறாராம்.

இந்த சுள்ளானுக்குள் இவ்வளவு திறமைக்கு இடமிருக்கா என்று எண்ணி அதிர்ந்து போனேன். இப்போதெல்லாம் நித்திரைக்கு போனால் கொலவெறி பற்றி அடுத்த கட்டமாக என்ன மாதிரியான செய்திகள் வரலாம் என்றெல்லாம் கனவுகள் வருகிறது. இந்த மனஉளைச்சல் காரணமாக டாக்டரை போய் பார்க்க வேண்டியதாயிற்று. அவரும் இந்த கனவுகள் பற்றி மற்றவர்களுடன் கலந்து பேசினால் மனதில் உள்ள பாரம் கொஞ்சமாக குறையலாம் என்று சொல்லி ஐநூறு ரூபா பீஸ் வாங்கிட்டாரு. மற்றவர்களுடன் கலந்து பேச அவன் அவனுக்கு டைம் இருக்கணுமே. இதனாலேயே Blogஇல போட்டு விட்டா அவனவனுக்கு டைம் இருக்கிற நேரம் வாசித்து எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வான் இல்லையா.. அவன் நிச்சயம் செய்வான் நண்பேன்டா.. :)


கொலவெறியை அடுத்த கட்டம்தான் என்ன? கனவில் வந்து மனதில் நின்ற சில ஐடியாக்களை கீழே தந்திருக்கிறேன்.

1. Christopher Nolanஇன் அடுத்த படமான "Dark Knight Rises"இல் கொலவெறி பாடலை பயன்படுத்துவதில் உள்ள சாத்தியத்தினை பற்றி Christopher Nolan விளக்குகிறார். "கொலவெறி பாடல் ஒரு பெண்ணுக்கு மேலுள்ள ஆணின் கோபத்தினை நன்றாக வெளிக்கொண்டு வரும் பாடல். எனது படத்தில் வரும் நாயகியான Catwoman, Batmanஐ உள்ளுக்குள் லவ் பண்ணினாலும் Catwoman வேஷம் கட்டும்போது BatMan மேலே அவளுக்கு கொலவெறி ஏற்பட்டு தாக்குகிறாள். இந்த Situationஇல் அந்த உப்புசப்பில்லாத சண்டையை நிறுத்திவிட்டு BatMan இந்த பாட்டை Catwomanஐ நோக்கி பாடுவது போல புதுசா எடுக்கபோறோம். BatManஉம் CatWomanஉம் நியுசிலாந்தில இருக்கிற வேப்ப மரத்தினை சுற்றி ஓடி திரிவது போல எடுக்கிறதா இருக்கிறோம். Hollywoodல இப்படி ஒரு புதுமையான சீன் வந்ததே இல்லை. Hans Zimmer ஏற்கனவே இங்கிலிஷில Remix பண்ண தொடங்கிட்டாரு. தனுஷிட்ட நேரடியா பேரம் பேசி பாட்டின் உரிமையை வாங்கத்தான் நான் இந்தியா வந்திருகிறேன். பயபுள்ள இருபது மில்லியன் போதாது என்கிறார்" என்று தலையிலே கையை வைக்கிறார் Nolan.

2. Obama கொலவெறி பாடலில் மயங்கி 2012ல் தொடங்கும் புதிய Nursery(L.K.G) வகுப்புகளில் ஒரு முக்கிய Nursery Rhymeஆக சேர்க்குமாறு அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். இதைப்பற்றி அவர் மேலும் கூறுகையில், "எனது சிறுவயது பிராயங்களில் இப்படியான ஒரு அருமையான பாட்டை பாட முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன். இனி வரும் இளம் சந்ததியினர் பாடி மகிழவே இதனை Nursery Rhymeஆக சேர்க்க கோரினேன்" என்று கண்ணீருடன் பேசினார். கண்ணை துடைத்துக்கொண்டே அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த பாடல் Bin Laden Nurseryயில படிக்கும்போது இருந்திருந்தால் நிச்சயமாக 9/11 போன்றொதொரு அழிவு அமெரிக்காவுக்கே ஏற்பட்டிராது என்பதை ஏக்கத்துடன் தெரிவித்தார். முடிக்கும்போது "ஒருநாள் தனுஷை வெள்ளை மாளிகைக்கு கூப்பிட்டு Dinner கொடுக்கணும்." என்று சந்தோஷ செய்தியுடன் முடித்தார்.

3. Rwandaஇன் ஜனாதிபதி கொலவெறி பாடலை தங்களது தேசிய கீதமாக மாற்ற கடுமையாக முயற்சிக்கிறாராம். இதன்மூலம் 1994ல் இடம்பெற்றது போன்றதொரு கலவரம் இனி ஏற்பாடாது என உறுதியாக நம்புகிறாராம். ஆனால் வரிகள் சிலவற்றை மாற்றி உருப்படியான தேசியகீதமாக மாற்றுவதில் தனுஷ் மும்முரம் காட்டுகிறார். இதில் "Why this கொலவெறி HUTU" என்று ஆரம்பிக்கும் என்று தனுஷின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் வரிகள் அஹிம்சா முறையில் HUTU, TUTSI இனங்களுக்கு இடையே சமத்துவத்தினை பேணுவது பற்றி விளக்குமாம்.

4. தனுஷுக்கு கிடைத்த Overnight popularityயை பார்த்து வெறுத்துபோன STR என்கிற சிம்பு "இனிமே இந்த ஆட்டத்துக்கு வரலை" என்று சொல்லிவிட்டு பாட்டே இல்லாத படங்களில் மட்டுமே இனி நடிப்பதாக அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார். இனிமே என் பக்கத்திலே யாரவது இந்த பாட்டை பாடினா கொதிக்குற எண்ணையை என்ர காதுக்குள்ளே நானே ஊத்திட்டு பாடுறவனை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று கொலைவெறி statement கொடுத்திருக்காரு STR.

7 comments:

 1. வை திஸ் கொலைவெறி விமல்?

  ReplyDelete
 2. ஹாய் விஷ்வா, சும்மா ஜஸ்ட் ஜாலி கொலவெறி :)

  ReplyDelete
 3. உங்கள் வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.. Happy New Year..

  ReplyDelete
 4. http://orupadalayinkathai.blogspot.com/2012/01/blog-post_03.html

  ReplyDelete
 5. Whiteu skinnu girlu girlu heartu maddum blacku..

  ReplyDelete
 6. Vimal!!! ReallY InterestinG.... All ideas are made me LOL at office. Particularly Obama கொலவெறி பாடலில் மயங்கி 2012ல்... All are very interesting...
  See this friends.
  http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0

  See this too...
  http://www.youtube.com/watch?v=XB9GjTi3x0c

  ReplyDelete