இவங்கதான் Mentors.. |
அதிகாலை(?) 7 மணிக்கே எழும்பி குளித்துவிட்டு பழைய Park அருகாமையில் தங்கியிருந்த Mentors மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு விரைந்தோம். ஆனாலும் இருபது நிமிஷம் தாமதம். போட்டியாளர்கள் தங்களது அணிக்கான Mentorஐ தேடிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாளான 27ஆம் திகதி Software Design. இது மாணவர்களுக்கு கொஞ்சம் அந்நியமான சுற்று என்றே எனக்குப்பட்டது. 13ஆம் திகதி நடந்த Project Proposal Roundஇன் போது நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு Round பற்றிய அறிமுகத்தை வழங்கினோம். அந்நிகழ்வில் நான்தான் Design Round பற்றிய அறிமுகத்தை வழங்கினேன். அப்போது "Software Design என்றால் என்ன" என்ற கேள்வியை கேட்க மாணவர்களிடையே அமைதி. கிடைத்த ஒரு சில
பதில்களும் வேறு ஏதோ ஒன்றை பற்றியதாக இருந்தது. முதலில் ஆடிப்போன நான் எளிதாக புரியும்வண்ணம் Software Designஐ வீடு கட்டும் போது போடும் planஉடன் ஒப்பிட்டேன். "வீடு கட்டும்போது சரியாக Plan போடாமல் கட்டினால் வீட்டு பொம்பளைகள் ஏதாவது குறை கண்டு பிடிப்பார்கள். வீட்டை கழுவினால் தண்ணீர் வெளியே தட்ட முடியவில்லை என்பார்கள். ஆகவே வீடு கட்டுவதற்கு முன்னராகவே Plan போட்டுவிட்டு எல்லோரிடமும் காட்டிய பின்னர் கட்டினால் அப்படி ஒரு பிரச்சனை வராது. அதுபோலவே Software Applicationஐ செய்வதற்கு முன்னராகவே செய்யும் visual planதான் Software design" என்றேன். நானும் பல்கலைகழக காலங்களில் Software Design பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. புரிய முயற்சிக்கவில்லை. ஆகவே இந்த Roundஐ எப்படி போட்டியாளர்கள் எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் எங்களுக்கு இல்லாமலில்லை. முதலாவது Roundஇல் செய்தது போலவே,
போட்டியாளர்களின் ஆயத்தங்களை கண்காணிக்க பாலா அண்ணன், விஜயராதா, மதுரா, நிரூபரன் அடங்கிய அதிரடிப்படை கிளம்பியது. இவர்கள் ஒவ்வொரு அணிகள் செய்த ஆயத்தங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்களின் நிறை குறைகள் பற்றி அவர்களிடமே கூறினர் . ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் சொன்ன பின்னூட்டங்களின் மூலமாக சில அணிகள் தங்களது Designஐ திறம்படுத்தின.
மதியம் பன்னிரெண்டரை மணி, அரக்க பறக்க சாப்பிட்டுவிட்டு Judgeக்கு Design Round பற்றிய அறிமுகத்தை சொன்னோம். அப்போது நான் குறிப்பிட்ட "Unorthodox Diagram" பற்றி Judges நிறைய விசாரித்தனர். வழமையான Software Design standardsஇனை பாவிக்காமல் புதுமையாக வடிவமைக்கப்பட்ட ஏதாவதொரு innovative Diagram என்றேன். அதன்பிறகு Judges நிகழ்வு நடக்கும் இடத்துக்கு வர போட்டியாளர்களின் இதயம் துடித்த சத்தம் Judgesஇன் காலடி ஓசையையும் மீறி கேட்டது.
Round-02 Design Round
Panel.. Expert panel.. |
சில அணிகளின் Presentationகள் புதுமையாக இருந்தது. சில அணிகள் போதுமான Design diagramகள் இருந்த போதிலும் அவற்றை சரியாக விளக்கத்தவறின. அன்றைய presentationகளின் சுருக்கம் பின்வருமாறு.
Team: Phoenix
Project : கண் பார்வையற்றோருக்கான VirtualEyeஇவர்களுடைய project research வகையை சார்ந்தது ஆகவே Designஐ prepare செய்வதற்கு நிறைய யோசிக்க வேண்டும். நவீன Technologies பற்றி தேடுதல் நடத்த வேண்டும். இதை இவர்கள் கிட்டத்தட்ட சரியாக செய்திருந்தார்கள். ஆனாலும் பாவிக்கும் Tenhnologiesஇல் சில இடங்களில் சறுக்கியிருந்தார்கள். கேள்வி நேரம் இவர்களது திறமையை மேலும் சோதித்தது. ஆனாலும் குறிப்பிட்ட சில கேள்விகளை சரியாக பதிலளித்தார்கள்.
Team: yarl Eagles
Project : Tourist Guide Web portalஇவர்களது Project nature காரணமாக இந்த Roundக்கு எதாவது புதிதாக யோசித்தால்தான் எடுபடும் என்ற சூழ்நிலை. Web Applicationகளுக்கு பொருத்தமான diagramகளை இவ்வணியினர் பயன்படுத்தி present செய்தாலும் அதில் அவ்வளவு புதுமை இருக்கவில்லை. என்றாலும் ஓரளவு முழுமையாக presentation எனலாம்.
Team: Young Bloomers
Project : IFishஇவர்களது projectஇனுடைய Scope அதிகமாக இருப்பதாக நடுவர்கள் முதலாவது Roundஇல் கூறியிருந்தார்கள். ஆகவே இந்த Roundஇன் தொடக்கத்தில் தங்களது குறைக்கபட்ட புதிய Scopeஇனை விளங்கப்படுத்தியவாறு தொடங்கினார்கள். இவர்கள் பொருத்தமான Architecture, Activity diagramகளை தெரிவு செய்திருந்தாலும், present பண்ணும்போது ஒருவித தடுமாற்றம் இருப்பதை உணர முடிந்தது. பின்னர் விசாரித்தபோது இவர்களுக்கு துரதிஷ்டவசமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வின் காரணமாக சரியாக ஆயத்தபடுத்த முடியாமல் போனதாக அறிந்தோம். இந்த Roundஇல் இவர்கள் வெளியேறினாலும் இவர்களுடைய Project concept எல்லோருக்கும் பிடித்திருந்ததை ஒருவரும் மறுக்க முடியாது.
Team: Cybers
Project : Social Mobicஇந்த roundஇற்கு ஏற்ற scope இருக்கிற project என்பதால் என்ன மாதிரியான Design diagramகளை தெரிவு செய்யவேண்டும் என்பதில் இவர்களுக்கு குழப்பம் இருக்க வாய்ப்பில்லை. Project architecture diagram, Activity diagram என்று கலந்து முழுமையான presentationஐ வழங்கினர். எனினும் Diagramகள் இன்னும் புதுமையாக தெளிவாக உருவாக்கியிருக்கலாம் என்று எனக்குப்பட்டது.
Team: Zeros
Project : ஆடு புலி ஆட்டம் Modile Gameஇவர்களது project ஒரு போனுக்குள்ளே மட்டும் வாழும் Software பற்றியது. ஆகவே மற்ற அணிகள் போன்று ஜரூராக வகைவகையாக Design diagramகளை போட முடியாது. ஆகவே இவர்களுக்கு இந்த Roundஇல் மிக வித்தியாசமான approach அவசியப்பட்டது. அதனை அவர்கள் சரியாக செய்ய முயற்சித்தாலும் அவ்வளவு impressive ஆக இருக்கவில்லை என்றே எனக்குப்பட்டது. ஆனாலும் presentation தெளிவாக இருந்தது.
Team: Arimaa
Project : AID, Portal for Benefactors and beneficiariesஇவர்களது web portal projectஇற்கு ஏற்றவாறு Architecture diagram, Component diagram, Mock UI flow என்று கலந்து தங்களது project designஇனை சிறப்பாக present செய்தனர். பயன்படுத்தபோகும் Technologiesஇல் PHP, Symfony, Ajax போன்ற Technologiesகளை அடுக்கினாலும், இவற்றை பாவிப்பதால் ஏற்படும் நன்மைகளை சரியாக convey செய்யத்தவறியது சின்ன நெருடலாக இருந்தது. என்னைகேட்டால் Symfony போன்ற Frameworkஇல் உள்ள librariesஐ பாவிப்பதன் மூலம் Development நேரத்தினை குறைக்கலாம் என்பேன்.
Design in the Poster paper, by smart friends |
Team: Smart Friends
Project : Automated Electricity Meter reading system.இவர்களது project, Hardware component பாதி Software component பாதி இணைந்த கலவை. ஆகவே Electronic Hardware சம்பந்தமான componentகளை poster paperஇல் வரைந்து புதுமையாக present பண்ணினார்கள். ஏனைய Software componentsகள் வழமை போல presentationஇல் வந்தது. முதல் Roundஇல் செய்ததை போலவே நான்கு உறுப்பினர்களும் சேர்ந்து present செய்தது Team effortஐ காட்டுவதாக இருந்தது. Radio wave, GSM Modem, Http API, PHP ஆகிய Technologyகளை தெரிவு செய்திருந்தாலும் கேள்வி நேரத்தின் போது அதனை சரியாக defend பண்ணாதது ஒரு குறையாகவே இருந்தது..
Team: Crazy Coders
Project : Automated HealthCare patient details storage system.Software Designஇன் முக்கிய அங்கம் Usecase diagram ஆகும். அதனை இவர்கள் சரியாக பயன்படுத்தி ஒரு patient இந்த systemஇனை Card மூலமாக பாவிக்கும்போது வரக்கூடிய அத்தனை scenarioக்களையும் பட்டியலிட்டனர். அத்துடன் இவர்கள் தெரிவு செய்த Technologyகள் இவர்களுடைய projectஇற்கு சரியாக பொருந்தியிருந்தததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
எல்லா அணிகளும் present செய்து முடித்தபின்னர் Judges
அரங்கிலிருந்து வெளியேறி Final results பற்றிய விவாதத்தில் ஆழ்ந்தனர். இம்மாதிரியான விவாதங்கள் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக போகும். போதாக்குறைக்கு அன்றைய தினம் சில அணிகளை வெளியேற்ற இருப்பதாக Judges கூறிச்சென்றனர்.
ஒரு "பலியாடு" தயாராகிறது.. |
துஷி அழகாக Automated meter readerஇற்குரிய பதிலீட்டு designஐ விளங்கபடுத்தினார். மாணவர்களுக்கு இவரிடமிருந்து கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு நேரமும் கேள்விகளுக்கு பதில் சொல்லி களைத்துபோயிருந்த மாணவர்கள் கிடைத்த சந்தர்பத்தில் துஷியை கேள்விகளால் துளைத்தனர். அவற்றுக்கு துஷி பொறுமையாக சிரித்த முகத்துடன் பதிலளித்தார். இந்நிகழ்வை பற்றி எங்களுக்குள் கதைக்கும் போது "பலியாடு" என்று CodeWord வைத்துக்கொண்டோம். ஏனென்றால் தீடீரென்று எங்களில் தெரிவுசெய்யப்படும் ஒருவர் முன்னுக்கு வந்து present பண்ணவேண்டும்.. கேள்விக்கணைகளை முறியடிக்க வேண்டும்.. அடுத்த நாள் போட்டியின்போது யாரை அனுப்பலாம் என்று ஒரு சின்ன விவாதமே எங்களுக்குள் நடந்தது.
இந்நேரத்தில் Judges தங்களது முடிவுகளை அறிவிப்பதற்காக போட்டி நடக்குமிடத்துக்கு திரும்பினர். ஒவ்வொரு அணிக்குமான நிறை குறைகளை விரிவாக அலசினர். போட்டியாளர்கள் மட்டுமன்றி Mentorகளும் பதற்றத்துடன் பார்த்துகொண்டிருக்க முடிவு வெளிவந்தது. கடைசியாக Young Bloomers மற்றும் Yarl Eagles ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மிகக்குறைவான புள்ளி வித்தியாசத்தினாலேயே இவ்வணிகள் வெளியேற்றப்பட்டதை Judges குறிப்பிடத்தவறவில்லை, எனக்கு இவ்வணிகளின் project ideaக்கள் மிகவும் பிடித்திருந்தன. ஆனாலும் அன்றைய தினத்தில் அவர்களுக்கு அதிஷ்டம் இருக்கவில்லை போலும். Crazy Coders அணியின் தெளிவான presentation மூலமாக அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.
தொடரும் (Algo Round)
நல்ல ஒரு கவரேஜ் ... அணிகள் விலக்கப்பட்ட காரணங்களை விவரியுங்கள் ... white paper இல் design பண்ணும் அணி எது? அந்த படம் தான் yarl geek challenge இன் வெற்றியை சொல்லும் படம்.
ReplyDeleteநன்றி அண்ணா!
ReplyDelete//
அணிகள் விலக்கப்பட்ட காரணங்களை விவரியுங்கள்
//
Presentation பற்றிய summary பற்றி கொஞ்சம் விபரம் புதிதாக Add பண்ணியிருக்கிறேன்.
/*... White boardஐ பாவிச்சு சொன்னீங்க என்றால் நல்லா எடுபடும். உங்களுக்கு மேவி இழுத்தா வாற Hairstyle சூப்பரா இருக்கும் ...*/
ReplyDeleteஇதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை... ஒரு பச்சைபிள்ளைய நானும் வாறன் சேர்ந்து செய்வம் என்று ஏமாத்தி அனுப்பிட்டு இதில ஸ்டைல் அது இது என்டு எக்ஸ்ரா பிட் (Extra Bit) வேற...