Monday, January 16, 2012

2012இல் வறட்சி? காமிக்ஸின் பொற்காலம்? விஜயும் இனி நம்ம நண்பேண்டா!

இந்த வருடத்தில் நான் எழுதும் முதல் பதிவு. இவ்வருடம் தொடங்கியதிலிருந்து எனக்குள் Summer தொடங்கி விட்டதோ தெரியவில்லை. அவ்வளவு கற்பனை வறட்சி. வருஷம் தொடங்கிய இரண்டாம் நாள், அலுவலகத்திற்கு சென்றபோது எனது கணணிக்கான Mouseஐ காணவில்லை. யாரோ ஒரு படுபாவி அதனை எடுத்துவிட்டு திரும்ப வைக்க மறந்து விட்டான். System Admin இடம் கெஞ்சி கூத்தாடி ஒரு Mouseஐ வாங்கி வருவதற்குள் நல்ல நேரம் போய் விட்டது :). இந்த சம்பவம் ஒன்றே போதும், இந்த வருஷம் முழுவதும் எனக்கும் கணணிக்குமான உறவை பறைசாற்ற. ஆகவே பதிவிடவும் முடியவில்லை. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உருப்படாத ஐடியாக்களே கிடைத்தன. அவற்றை முழுமையான பதிவாக மாற்ற முடியவில்லை. ஆகவே எழுதுவதை விட்டுவிட்டேன். எனினும் பதிவுலகின் மரபுப்படி சிதறிய ஒன்றுகொன்று சம்பந்தமில்லாத விஷயங்களை ஒன்று திரட்டி பதிவிடுகிறேன்.

2012 -- இன்னொரு காமிக்ஸ் பொற்காலத்தின் ஆரம்பம்
சென்னையில் நடக்கும் BookFairஇல் பல பிரபல புத்தக பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இதில் லயன் காமிக்ஸ் பதிப்பகத்தினரும் தங்களது படைப்புகளை அழகாக காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதில் புதிதாக 100 ரூபா விலையில் வெளியிடப்பட்ட Comeback ஸ்பெஷலும் HotCakes போல விற்று தீருகிறதாம். இதில் Bernard Prince மற்றும் லக்கி லூக் கதைகள் கலரில் அற்புதமாக தரத்தில் அதில் இடம்பெற்று இருப்பதாக எனது பதிவுலக நண்பர்களின் பதிவுகள் ஊடாக அறியமுடிகிறது. ஆளாளுக்கு சூப்பராக பதிவுகளை போட்டு எங்களுக்கு எச்சில் ஊறவைக்கிறார்கள் :). இதில் நண்பர் விஸ்வா Bookfair பற்றி நாளுக்கு ஒரு பதிவு போட்டு அங்கு நடக்கும் விஷயங்களை படங்களுடன் போட்டு Bookfairஐ கண்முன்னே கொண்டு வருகிறார். அவர் மூலமாக பல பிரபலங்களும் காமிக்ஸ் ரசிகர்களாக இருப்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன். உதாரணத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன், மிஸ்கின் போன்றோரை குறிப்பிடலாம். மிஸ்கின் எதாவது பிரபலமான ஒரு காமிக்ஸ் ஹீரோவை படமாக எடுத்தால் சூப்பரா வரும் என்று நினைக்கிறேன். இந்த Bookfairஇல் லயன் காமிக்ஸின் பல பழைய பொக்கிஷ இதழ்களும் விற்று தீர்ந்து பல புதிய வாசகர்கள் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இனி வெளிவர இருக்கும் புதிய கதைகளின் அறிவிப்பு சும்மா தூள்பரத்துது. இன்னொரு காமிக்ஸ் பொற்காலத்தின் தொடக்கத்தில் நாங்கள் இருப்பதாகவே எண்ணுகிறேன். விஸ்வா ஒவ்வொரு நாளும் காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பதற்கே Bookfairக்கு போய் பல மணிநேரம் செலவழிக்கிறாராம். இவரின் காமிக்ஸ் ஆர்வத்தினை என்னவென்பது. இலங்கைக்கு சீக்கிரமே லயன் Comeback ஸ்பெஷலை அனுப்பி வைக்க எடிட்டர் விஜயன் அவர்களை வேண்டுகிறேன். ஒவ்வொரு நாளும் லயன் Comeback ஸ்பெஷலை கடையில் வாங்குவது போன்ற கனவுதான் வருகிறது. சீக்கிரமே நீங்க புத்தகத்தினை அனுப்பினா நாங்க வாழ்க்கையிலே முன்னேறுகிற மாதிரியான கனவுகளுக்கு பழையபடி திரும்ப முடியும்.


விஜய் -- இனி இவன் நன்பேண்டா..
இரண்டு நாட்களுக்கு முன்னர் "நண்பன்" படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்பே 3 idiots படத்தை பார்த்து விட்டதாலே பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மேலே இருக்கவில்லை. நல்ல காலத்துக்கு Subtitle சரியாக இல்லதாலும் ஹிந்தி எனக்கு ஒரு greek என்பதாலும் அந்த படம் எனக்கு சரியாக புரியவில்லை. ஆகவே தமிழில் வசனங்கள் புதிதாக நன்றாக ரசிக்கும்படி இருந்தது. எல்லோரும் அழகான நடிப்பினை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக விஜய் நல்ல துருதுருப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவரின் நடிப்பு எப்போதும் எனக்கு பிடிக்கும்தான் ஆனால் டப்பா ஆக்சன் கதைகளில் நடித்து பேரை கெடுத்துகொண்டிருக்கிறார். இந்த படத்தின்மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன். வஷிஸ்டர் வாயாமல் பாராட்டு பெற்றது போல சினிமா துறை அமைச்சர் ஜீ வேற விஜயை புகழ்ந்து தள்ளிட்டார். நான் வேற சொல்லணுமா? வசனங்கள் நகைச்சுவையாகவும் சிந்திக்கவைக்கும் வகையிலும் அருமையாக கையாண்டிருக்கிறார்கள். இரண்டு பாடல்கள் இப்போதும் மனதில் ஒலிக்கும்வண்ணம் இருக்கின்றன. மற்றவை தியேட்டரில் இருந்து வெளியே வந்த போது வீசிய பலமான காற்றில் இழுத்து செல்லப்பட்டுவிட்டன. இந்த படத்துக்கு ஷங்கர் வாய்த்தது எங்களுக்கு அதிர்ஷ்டமே :). இந்த படத்தில் சொன்ன message நன்றாக இருந்தது. படம் முடியும்போது, நான் பக்கத்தில் இருந்த அலுவலக நண்பரிடம், என் வேலையை அடுத்த மாதத்தில் இருந்து இராஜினாமா செய்யபோவதாக சொன்னேன். அவரும் நம்பிக்கை இல்லாமல் பார்த்து சிரித்தார். இராஜினாமா செய்து விட்டு எனக்கு பிடித்த வேலையை பார்க்கப்போனால் நன்றாக இருக்கும் :).
கொலவெறி -- இன்னும் அடங்கலை
Why this கொலவெறிடீ பாடல் மட்டுமல்ல, அதை பற்றி எவன் எழுதினாலும் எல்லோரும் ஆர்வமாக அவதானிக்கிறார்கள். நான் எழுதின பதிவை வாசித்து பலர் தங்களது அதிருப்தியினை எனக்கு தெரிவித்தார்கள் :). சிலர் பாராட்டினார்கள். நான் எழுதின டப்பா பதிவுகளிலேயே பலமுறை வாசிக்கப்பட்ட பதிவு வரிசையில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. உங்களுக்கு பலகோடி நன்றிகள் தனுஷ் :). இந்த பாடலை இப்போது படமாக்கி கொண்டிருக்கிறார்களாம். அந்த பாடலின் பிரபல்யம் அவர்களுக்கு பெரிய pressure இனை கொடுக்கும். இதையும் ஏனோ தானோவென்று எடுத்தால் நன்றாக வரலாம்.

No comments:

Post a Comment