சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன் போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.
இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.
இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும் "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.
வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.
இத்தனைக்கும் இந்த சீரியசான கதையை நகர்த்துவது பொம்மை வடிவிலுள்ள எலிகளும், பூனைகளும், பன்றிகளும்தான். இந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் எப்படி உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் முகத்தை வைத்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கதையை வாசிக்கத்தொடங்கி ஐந்தாறு பக்கங்கள் முடிந்த பின்னர். எலிகள், பூனைகளாவும் உங்கள் கண்களுக்கு யூதர்களாகவும், ஜேர்மானியர்களாகவும் தெரிவார்கள். என்னதான் ஒரு எலியை வரைந்திருந்தாலும் அதன் முகபாவம், வயது வேறுபாடு, பால் வேறுபாடு என்பனவற்றை சரியாக வேறுபடுத்தி விளங்குமாறு வரைந்திருப்பார் ஆர்ட்.
இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன் போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.
இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.
இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும் "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.
வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.
இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.
//விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். //
ReplyDeleteஇந்தப் புத்தகத்தை வாசித்த பிறகும் இதே ஒபீனியன் தொடர்ந்தால் மகிழ்ச்சி.
மிக மிக அருமையான பதிவு. இதைவிட சிறப்பாக இனி யாராலும் எழுத முடியுமா? என்ற கேள்வியை முன்வைக்கிறது உங்களது எளிய, அருமையான நடை.
இதற்காகத்தான் நான் உங்களது முந்தைய பதிவுகள் பலவற்றிலும் ஒரே கமெண்ட்டைப் பலமுறை போடிருந்தேன்: //தொடர்ந்து எழுதவும்//.
நன்றி விஸ்வா.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. புத்தகத்தை பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு விளங்கியமட்டுக்கும் இதில் பதிந்துள்ளேன். இந்த புத்தகத்தை நிறைய ரசித்தேன். கடைசி பாகத்தின் தொடக்கத்தில், ஒரு பேட்டியின்ஆபோது ஆர்ட் தன்னை ஒரு சிறுவனாக உணரும்போது அவரது உருவம் சிறியதாக போவது ரசிக்கவைத்தது
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பதிவு. நேற்று உங்களை சந்தித்தபோது தொடர்ந்து பதிவிடுங்கள் என்று கோரிக்கையை முன்வைக்க மறந்துவிட்டேனே என்று பின்னர் வருந்தினேன். ஆனால், பதிவு இன்று வந்துவிட்டது. மிகத் தெளிவான எழுத்து - வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி நண்பரே.. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுவேன்.. அடிக்கடி எழுதாவிட்டால் நிறைய நேரம் எடுக்கின்றது :)
Delete